பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மற்றும் தருமபுரியில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பாமக கெளரவத்தலைவர் ஜி.கே.மணி மற்றும் சேலம் பாமக எம்.எல்.ஏ அருள் ஆகியோர் பங்கேற்கவில்லை.
அன்புமணிக்கு அருள் பதிலடி
முன்னதாக இருவருக்கும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பேசிய மேடையில் பேசிய அன்புமணி, இருவரும் உடல் அளவிலும், மனதளவிலும் நலம் பெற கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன எம்.எல்.ஏ அருள், “இறந்தவர்களுக்கு தான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள்.நாங்கள் நல்லதானே உள்ளோம்” என அன்புமணிக்கு பதிலடி கொடுத்தார்.
செயல் தலைவர் மட்டுமே
இதைத்தொடர்ந்து ராமதாஸை சந்தித்து அருள் பேசி இருந்தார். ராமதாஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமித்து ராமதாஸ் அறிவித்தார்.
இதையடுத்து, பாமக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அருளை நீக்குவதாகவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு நிர்வாகியை நியமித்துப்பதாகவும் அன்புமணி அறிவித்தார்.
இதனால் கடுப்பான எம்.எல்.ஏ அருள், தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது என்றும் அன்புமணி செயல் தலைவர் மட்டுமே. என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது என அதிரடியாக பேட்டியளித்தார்.
அருளை நீக்க அதிகாரமில்லை
இந்த நிலையில், பாமக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளை நீக்குவதாக அன்புமணி நேற்று அறிவித்தார்.இது பாமக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமக எம்.எல்.ஏ அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கொடுத்துதான் அருளை நீக்க முடியும்.
கூட்டணி குறித்து முடிவு
பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. பாமக கொறடாவாக அருள் தொடர்வார் என்றும் அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்கி உள்ளேன்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். கட்சியை நானே தொடர்ந்து வழி நடத்துவேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.