K U M U D A M   N E W S

சென்னை

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. 

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TASMAC Leave Update.. தமிழகத்தில் மூடப்படுகிறது டாஸ்மாக்..!

சென்னையில் ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக அலுவலகத்தில் தயாராகும் கொள்கை தலைவர்கள் சிலை

அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சற்றுநேரத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.

"இவர் தான் அந்த சார்.." ஷாக் கொடுத்த திமுகவினர்

'இவர் தான் அந்த சார்' என்ற பதாகைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை.

ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு 

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. விஜய் எடுக்கப்போகும் அதிரடி மூவ்

தவெக பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.

பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் பரபரப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து நெரிசல்

நாளை நடைபெறும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

பனையூரில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள், சென்னை பனையூர் அலுவலகத்திற்கு அழைப்பு.

சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி.. தபெதிகவினர் கைது

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.

இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு மூன்றாவது நாளாக, யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்.

தடையை மீறி போராட்டம்.. பாஜக இளைஞரணியினர் கூண்டோடு கைது

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.