சினிமா

பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயாருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயாருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அமீர்கான் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவந்து வருகிறார். இவர் ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்வார். அந்த அளவிற்கு இவர் நடிப்பின் மீதும் சினிமா மீதும் அதீத அர்பணிப்பு கொண்டுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று இரண்டாயில் கோடி ரூபாய் வசூல் செய்தது. பாலிவுட்டில் முதல் முறையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையும் ‘தங்கல்’ படைத்தது.

மேலும் படிக்க: ஹேக் செய்யப்படும் X தளம் நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள் உண்மையில் நடப்பது என்ன?

தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகர் அமீர்கான் நடித்திருந்தார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜின் ட்ரீம் ப்ராஜெக்ட்டான ’இரும்புகை மாயாவி’ என்ற திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ’இருப்புகை மாயாவி’ சூப்பர் ஹீரோ படம் என்பதால் அதற்கு அமீர்கான் தான் சரியாக இருப்பார் என்பதால் இந்த முடிவை லோகேஷ் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் அமீர்கானும் எந்த தகவலும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க: என்னுடைய வருமானத்தில் கட்டியது.. அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் சூர்யா நெகிழ்ச்சி..!

இந்நிலையில், நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 85 வயதான  ஜீனத் தாஹிர் ஹுசைன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.