சினிமா

ஹேக் செய்யப்படும் X தளம் நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள் உண்மையில் நடப்பது என்ன?

நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் திடீரென ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது ஏதோ விஷமிகளின் விளையாட்டு என நினைத்தால், அதுபற்றி கிடைத்துள்ள தகவல்கள், பகீர் கிளப்பியுள்ளன..... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

ஹேக் செய்யப்படும் X தளம்  நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள்  உண்மையில் நடப்பது என்ன?
ஹேக் செய்யப்படும் X தளம் நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள் உண்மையில் நடப்பது என்ன?

”திடீர் திடீர்ன்னு சாயுதாம்... திடீர் திடீர்ன்னு உடையுதாம்” என்ற சந்திரமுகி பட காமெடி போல, முன்னணி நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் திடீர் திடீரென ஹேக் செய்யப்படுகின்றன. எக்ஸ் தளமோ அல்லது இன்ஸ்டாகிராம் ஐடியோ அப்படி ஹேக் செய்யப்படும் போது, உடனே ஓடிவந்து, “ஐயஹோ! எனது சோஷியல் மீடியா பேஜ்-ஐ ஹேக் செஞ்சுட்டாங்க... அதில் வரும் போஸ்ட்களை நம்பாதீங்க, அது நான் பண்ணல” என விளக்கம் கொடுப்பது நடிகைகளின் வாடிக்கையாகிவிட்டது. அப்படி சமீபத்தில் த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது.   

அப்போது தனது எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக, இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தார் த்ரிஷா. இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே த்ரிஷாவின் எக்ஸ் தளக் கணக்கு மீட்கப்பட்டது. ஆனால், த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்த போது, அதில் கிரிப்டோ கரன்சி குறித்த விளம்பரம் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், பல நடிகைகளின் எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்படும் போது, அதில் ஏடாகூடமான விளம்பரங்கள் போஸ்ட் போட்டு பின்னர் டெலிட் செய்யப்படுவது நடந்துள்ளது.   

ஆனால், இவை அனைத்துமே திட்டமிட்டு செய்யப்படும் ப்ரோமோஷன்கள் என ஒரு தரப்பினர் அதிச்சி தகவலை முன்வைக்கின்றனர். அதாவது த்ரிஷாவின் எக்ஸ் தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்ட போது, அதில் கிரிப்டோ கரன்ஸி விளம்பரம் ஷேர் ஆனது. பின்னர் சிறிது நேரேத்திலே அது டெலிட் செய்யப்பட்டது. எக்ஸ் தளத்தில் த்ரிஷாவை 6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதனால் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளிடம் டீலிங் பேசி, சில நிமிடங்களுக்கு மட்டும் எக்ஸ் தளத்தை ஹேக் செய்து, விளம்பரங்கள் போடப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்காக, நடிகைகளுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த மாதிரி டீலிங் காரணமாக தான், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் அடிக்கடி ஹேக் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் இருந்தாலும் இல்லை என்றாலும், சைடு கேப்பில் இப்படியும் பணம் சம்பதிக்க, நடிகைகள் சிலர் இதனை காதும் காதும் வைத்தபடி செய்து வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்றாலும், இதுவும் செம டீலிங் தான் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.