Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21 - அஷ்டமத்து சந்திரனால் கஷ்டங்கள் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: புதன் பகவானின் அருள் நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் சந்திரன் கும்ப ராசியில் இரவு வரை பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 21, 2024 - 05:00
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21 - அஷ்டமத்து சந்திரனால் கஷ்டங்கள் யாருக்கு?
today rasi palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 05ஆம் நாள் ஆகஸ்ட் 21ஆம் தேதி புதன்கிழமை  துவிதியைத் திதி மாலை  05.07 மணி வரை அதன் பின் திருதியை. பூரட்டாதி நட்சத்திரம் நள்ளிரவு 12.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். கயாத்ரி ஜபம் தினமான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம்?கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 

மேஷம்

இன்று வெளியூரில் இருந்து சுபசெய்திகள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையப்போகிறது.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை. பண விசயத்தில் கவனமும் நிதானமும் அவசியம். 

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.

துலாம்

திடீர் பண வருமானம் வரும்.  குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்வீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றிகள் உண்டாகும்.  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் கால தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

கும்பம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்

விரைய ஸ்தான சந்திரனால் இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow