Anitha Sampath : படிக்கட்டுக்கு 11 லட்சமா? வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட அனிதா சம்பத்.. தமிழக அரசு பதிலடி!

Anitha Sampath Video : கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளம் படிக்கட்டு கட்டட செலவு குறித்து அனிதா சம்பத் பேசியிருப்பதில் உண்மையில்லை வதந்தியை நம்பாதீர்கள் என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது.

Aug 2, 2024 - 11:08
Aug 3, 2024 - 10:11
 0
Anitha Sampath : படிக்கட்டுக்கு 11 லட்சமா? வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட அனிதா சம்பத்.. தமிழக அரசு பதிலடி!
Anitha Sampath Video

Anitha Sampath Video : செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். அந்த கோவில் குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. வதந்தியை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளது. 

கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிட்டதாக அனிதா சம்பத் வீடியோ பேசி பதிட்டிருந்தார். அதில், “நான் வந்து மாங்காடு பக்கத்தில் இருக்கிற கொழுமணிவாக்கம் என்ற இடத்தில் இருக்கேன். இங்க ஒரு போர்டு போட்டு இருக்காங்க. இந்த போர்ட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்; அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; கொழுமணிவாக்கம் ஊராட்சி; திருக்குளத்திற்கு நடைபாதை, படிகட்டு மேம்பாட்டு பணி; மதிப்பீடு ரூ. 11.36 லட்சம் என போட்டுருக்காங்க. 

இந்த படிகட்டை பாருங்க. இதை போட 11 லட்சம் ரூபாய் ஆகுமா? இந்த பணத்தில் வீடே கட்டுறாங்க. நானும் சுத்தி எதாவது கட்டியிருப்பாங்கன்னு தேடி பார்த்தேன். ஆனால் எங்கேயும் எதுவும் கிடையாது. இந்த ஒரு படிக்கட்டுக்கு எதுக்கு இவ்வளவு பணம்” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு, சமூக வலைதளங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள  கோவில்களில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது தொடர்பாக பரவும் செய்தி உண்மையல்ல. அதற்கு துறை சார்பில் உரிய விளக்கம் இன்றே அளிக்கப்படும். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என பொய் தகவல் பரப்ப முயற்சி செய்வோரின் செயல் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு சென்னை பாரி முனையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு ரூ 2 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான வெள்ளி தகடு வேயும் பணியை தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு ராமேஸ்வரம், சமயபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் 6 தங்க ரதங்கள் ஓடாமல் இருந்தது. அவை முழுமையாக சரி செய்யப்பட்டு இன்று திருத்தேர்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் 9 வெள்ளித் தேர்கள் அறிவிக்கப்பட்டு திருத்தணியில் 4 கோடி செலவில் வெள்ளித்தேர் வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்டது.

காளிகாம்பாள் கோவிலில் 277கிலோ அளவில் வெள்ளி தகடு வேயும் பணி இன்று துவங்கியுள்ளது, முழு பணியும் 6 மாதங்களில் நிறைவடையும். திராவிட மாடல் ஆட்சியில் என்னென்ன திருப்பணிகள் அறிவித்தோமோ அத்தனையும் நடைபெற்ற வருகிறது.
முன்னேற்ற பணிகள் ஒரு புறம் நடைபெற்றாலும் இல்லாததை இட்டுக்கட்டி பொய்யான தகவல்களை பரப்புகின்றார்கள்.

பல்வேறு ஆக்கபூர்மான பணிகள் நடைபெற்றாலும் ஊடகங்களில் இல்லாத பலவற்றை பரப்புகிறார்கள். இந்த ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி என்பது போல் ஆனால் அது பலிக்கவில்லை. இதுவரை இல்லாத அளவில் அறநிலையத்துறையில் பணிகள் நடைபெற்றுள்ளது.

சமுக வலைத்தளத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தியிலுள்ள திருக்கோவில் படிக்கட்டுகள் தொடர்பான செய்திகள் முற்றிலும் தவறான இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதால் அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படுகிறது அந்த வகையில் இந்த செய்திக்கும் உரிய விளக்கம் இன்றே அளிக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக அனிதா சம்பத் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்படுகிறது. இது பொய் செய்தி. 

காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022 - 2023ஆம் ஆண்டில் திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செலவினங்கள்; 

படித்துறை அமைத்தால் - ரூ.1.70 லட்சம்
Inlet and Outlet - 66 ஆயிரம் 
நடைபாதை அமைத்தல் பேவர் பிளாக் - ரூ.6.17 லட்சம்
நடைபாதையைச் சுற்றிலும் மின்விளக்குகள் அமைத்தல் - ரூ. 96 ஆயிரம் 
மேசைகள் - ரூ. 1.73 லட்சம்
ஜிஎஸ்டி - ரூ.1.73 லட்சம் 

மொத்தம் - ரூ. 11. 36 லட்சம் 

என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வதந்தியை பரப்பாதீர்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow