K U M U D A M   N E W S

TN Rain : தமிழகத்தில் 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!

Chennai Meteorological Department Weather Update in Tamil Nadu : வரும் 19ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Independence Day 2024 : சென்னை கோட்டை கொத்தளத்தில் 4வது முறையாக தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM Stalin Host Flag on Independence Day 2024 in Chennai : 78வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

GOAT Trailer : கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி... ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு... இப்படி பண்றீங்களேம்மா!

The GOAT Movie Trailer Release Date : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

Wayanad Landlside : வயநாடு நிலச்சரிவு பகுதியில் கனமழை.. ராணுவ வீரர்கள் அமைத்த பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

Heavy Rain in Wayanad Landlside Area : நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amaran Making Video : சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ... திடீரென ரிலீஸாக என்ன காரணம்..?

Actor Sivakarthikeyan Movie Amaran Making Video : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

GOAT Trailer: “வெங்கட் பிரபு சாரே எல்லாரும் வெயிட்டிங்..” சொன்னபடி வந்த கோட் ரிலீஸ் தேதி அப்டேட்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் கொடுத்துள்ளார்.

Rowdy Rohit Raj : என் பேரன் மீது பொய் வழக்குப் போட்டு என்கவுண்ட்டர் - பிரபல ரவுடி ரோஹித் ராஜ் பாட்டி குமுறல்

Rowdy Rohit Raj Grandmother Speech : சென்னையில் பிரபல ரவுடி ரோஹித் சுட்டுப் பிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது பாட்டி காணிக்கை மேரி, தனது பேரன் மீது பொய் வழக்குப் போட்டி சுட்டுள்ளனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Chennai Police : ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. நேரில் பாராட்டி வெகுமதி வழங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்!

Chennai Police Commissioner Arun Praised SI Kalaichelvi : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கலைச்செல்வியை இன்று காலை நேரில் வரவழைத்த போலீஸ் கமிஷனர் அருண், கலைச்செல்வியின் துணிச்சலை மனம் திறந்து பாராட்டியதுடன், அவருக்கு வெகுமதி வழங்கியும் கெளரவித்துள்ளார்.

Theni Rescue Operation : தேனியில் விடிய, விடிய மழை.. வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்.. பத்திரமாக மீட்பு

Theni Rescue Operation : பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Rowdy : தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. சென்னையில் அதிகாலையில் அதிரடி!

Rowdy Arrest in Chennai : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது, என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Chennai Electric Train Cancellation : மின்சார ரயில் சேவை ரத்து ஆகஸ்ட் 18 வரை நீட்டிப்பு.. முழு விவரம்!

Chennai Electric Train Service Cancellation Extend : சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரம் செல்லாது; பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

DMK vs ADMK : 'தி.மு.க.வை வளர்த்ததே எம்.ஜி.ஆர்.தான்'.. அமைச்சருக்கு செல்லூர் ராஜு பதிலடி!

ADMK Sellur Raju Reply To DMK Minister TM Anbarasan : ''32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்'' என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் மாட்டு உரிமையாளர்கள் வாக்குவாதம்; ஒருவர் காயம்!

சென்னை மெரினா கடற்கரையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கச்சென்றபோது மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்த குழந்தை... அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் அந்த குளிர்பானத்தை ஆய்வு செய்து நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா; சென்னையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.

GOAT Trailer: கோட் ட்ரெய்லர் ரெடி... விஜய் ரசிகர்களுக்கு தாறுமாறான அப்டேட் கொடுத்த படக்குழு!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி செம மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple iPhone SE 4; ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உடன் களமிறங்கும் புதிய மாடல்!

Apple iPhone SE 4 New Model will Launch in 2025 : ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple Iphone SE 4 மாடலை அடுத்த ஆண்டு 2025ல் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADMK Ex Minister Benjamin : ஜெயலலிதா குறித்து பேசிய தா.மோ.அன்பரசன் உத்தமனா? - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் விளாசல்

ADMK Ex Minister Benjamin on Tha Mo Anbarasan : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கேவலமாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தமனா என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வெளுத்து வாங்கியுள்ளார்.

New Municipal Corporations : உதயமானது 4 புதிய மாநகராட்சிகள்.. திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்..

Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Audio Leak ; எப்பேர்பட்ட கொம்பன் வந்தாலும்.. மணல் மாஃபியாவிடம் போலிஸ் ஏஜெண்ட் டீலிங்க்..

Arani Sand Mafia with Police Agent Audio Leaked : ஆரணியில் மணல் மாபியாக்களிடம் போலீஸ் ஏஜென்ட், ஆட்டோ டிரைவரின் உரையாடல் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Selvaperunthagai : யார் யாரோ இருக்காங்க... உதயநிதி துணை முதல்வராவதில் என்ன தப்பு.. செல்வபெருந்தகை வரவேற்பு

Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Actor Vikram : “காதல் தொடர்பான படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” - நடிகர் விக்ரம் பூரிப்பு

Actor Vikram will Act Romantic Films : ‘தங்கலான்’ படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும் மற்றும் அனைவரும் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என நடிகர் விகரம் தெரிவித்துள்ளார்.

Bullock Cart Race : அரிமளம் மாட்டு வண்டி பந்தயம்; கண்களுக்கு விருந்தளித்த சீறிப்பாயும் மாடுகள்

Arimalam Bullock Cart Race in Sri Sethumel Chella Ayyanar Temple : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.