மேலும் இந்த படத்தில் யோகிபாபு, தீபா சங்கர், சரவணன், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாண்டிராஜ் - விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இதுவே என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் 'பசங்க', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கதகளி', 'கடைக்குட்டி சிங்கம்', ‘நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனால் 'தலைவன் தலைவி' படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் காதல் மற்றும் குடும்ப கதைக்களத்தை கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் முதல் பாடலான 'பொட்டல முட்டாயே...' என்ற பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சுப்லாஷினியுடன் பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். மேலும், இந்த படத்தின் 2-வதுபாடலான ‘ஆகாச வீரன்..’ என்ற பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பாடல் விவேக் வரிகளில், பிரதீப் குமார் மற்றும் தீ ஆகியோர் பாடியுள்ளனர்.
‘தலைவன் தலைவி’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் ட்ரெய்லர் அப்டேட் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை 17) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘தலைவன் தலைவி’ வெளியாகும் அதே நாளில் பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படமும் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று முன்தினம் (ஜூலை 14) வெளியானது.
Action-um iruku, Kadhal-um deep ah iruku… 🔥❤️#ThalaivanThalaivii Tharamana family entertainer ready to serve you from July 25th!💥
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 16, 2025
Trailer from tomorrow#ThalaivanThalaiviiFromJuly25@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @Music_Santhosh @PradeepERagav @studio9_suresh… pic.twitter.com/16DiwJCA66