லட்டு சர்ச்சை: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிக நிறுத்தம்..ஏன் தெரியுமா?
Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tirupati Laddu Controversy : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இங்கு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அசாத்திய சுவைக்காக சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கி வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் லட்டுகள் ஹாட் டாபிக் ஆக உள்ளன.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஒரு ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தி அறிந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளும் கொதித்தெழுந்துள்ளன. திருப்பதி கோயிலின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தியவர்கள் மீதும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மத்தியிலும் லட்டு பேசும்பொருளாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (செப் 30) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை என தெரிவித்தது.
மேலும்,”லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும். லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனில் பத்திரிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?” என உச்சநீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவிற்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.
மேலும் படிக்க: ”அதுதான் உங்களுக்கு கடைசி நாள்” வட கொரிவாவுக்கு ஓபன் சவால் விட்ட தென் கொரியா!
இந்நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஐ.டி விசாரிக்கலாமா அல்லது வேறு குழு அமைக்கலாமா என மத்திய அரசின் கருத்தை அறிய உச்சநீதிமன்றம் உத்த்ரவிட்ட நிலையில் தற்காலிகமால நிறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?