”அதுதான் உங்களுக்கு கடைசி நாள்” வட கொரிவாவுக்கு ஓபன் சவால் விட்ட தென் கொரியா!
ஆயுதப்படை தினத்தையொட்டி மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகப்படுத்தி தங்களை தாக்க நினைத்தால் அதுவே வடகொரியாவுக்கு கடைசி நாளாக அமையும் என சவால் வீட்டிருக்கிறார் தென்கொரிய அதிபர் யூன் சுக்.
ஆயுதப்படை தினத்தையொட்டி மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகப்படுத்தி தங்களை தாக்க நினைத்தால் அதுவே வடகொரியாவுக்கு கடைசி நாளாக அமையும் என சவால் வீட்டிருக்கிறார் தென்கொரிய அதிபர் யூன் சுக்.
கொரியா முன்னொரு காலத்தில் ஒன்றிணைந்து தான் இருந்தது. 2ம் உலகப்போரின் போது, கொரியாவிம் வடக்கு பகுதி சோவியத் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் தெற்கு பகுதி அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால், 1950ல் இருந்து 1953 வரை வட மற்றும் தென் கொரியா இடையே போர் ஏற்பட்டது. இந்த போரையடுத்து கொரியாவில் இரு பகுதிகளும் முழுமையாக வெவ்வேறு துருவமாக எதிரும், புதிருமாக மாறிப்போயின.
தற்போது வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சியும் தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 2011ம் ஆண்டில் இருந்து ஆண்டு வருகிறார் கிம் ஜாங் உன், தென் கொரியாவை அதிபர் யூன் சுக் 2022ம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.
என்னதான் போர் ஓய்ந்தாலும், இவ்விறு பகுதிகளுக்கு இடையே ஒரு அமைதியான போர் இருந்துக்கொண்டே தான் இருக்கும். தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வடகொரியா மிரட்டுவதாக இருக்கட்டும், அதற்கு அச்சப்படாமல் பதில் கொடுக்கும் தென்கொரியாவாக இருக்கட்டும், இது அப்பகுதியில் ஒரு எண்ட்-டே இல்லாமல் செல்லும் டாப்பிக். அவ்வையில், சமீபத்தில் கூட குப்பைகளை ஏர் பலூன்கள் மூலம் கட்டி தென்கொரிவாவின் எல்லைகளில் வீசியது வடகொரியா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய எல்லைகளில் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து பாட்டை ஒளிக்க செய்தது தென்கொரியா. வடகொரியாவில் பாடல்கள் கேட்பது சட்டத்துக்கு புரம்பானது. இதனால் இவ்வாறு ஒரு நூதன முறையை கையில் எடுத்திருந்தது தென்கொரியா.
அந்த வரிசையில், சமீபத்தில் அணு ஆயுதங்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவும் வகையில் தன்னிடம் இருக்கும் ரகசிய யுரேனியம் செறிவூட்டும் கிடங்கை உலகிற்கு காட்டினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது ஆயுதப்படை தின விழாவையொட்டி தான் தயாரித்த சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தென்கொரியா.
மேலும் படிக்க: ”எனது குடும்பத்தை குறிவைக்கின்றனர்” நிலங்களை ஒப்படைப்பது குறித்து மனைவி எழுதிய கடிதத்துக்கு சித்தராமையா பதில்
இது தொடர்பாக பேசிய, அதிபர் யூன், “தங்களை அணு ஆயுதங்கள் காக்கும் என்ற மாயையை வடகொரியா நம்புவதை நிறுத்த வேண்டும். அணு ஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால், தக்க பதிலடியை நாங்களும் எங்களின் நட்பு நாடான அமெரிக்காவும் கொடுக்கும். அன்றைய தினம் தான் வடகொரியாவில் கடைசி தினமாக இருக்கும். நாங்கள் தயாரித்திருக்கும் இந்த சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை வடகொரியாவில் நிலத்தடியில் உள்ள பதுங்கு குழிகள் வரை சென்று அழிவை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபரின் இந்த ஓபன் சவாலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?