6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Mar 12, 2025 - 09:30
Mar 12, 2025 - 09:35
 0
6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்த  ரோட்ரிகோ டுட்டெர்டே, ’போதைப்பொருளுக்கு எதிரான போர்’ என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பிதுள்ள உத்தரவின் அடிப்படையில் ரோட்ரிகோ டுட்டெர்டே கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கில் இருந்து பிலிப்பைன்ஸ் திரும்பிய ரோட்ரிகோ டுட்டெர்டேவை மணிலா விமான நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று (மார்ச் 11) கைது செய்தனர். 

ரோட்ரிகோ டுட்டெர்டே குற்றங்கள்:

பிலிப்பைன்ஸின் அதிபராகுவதற்கு முன்பு ரோட்ரிகோ டுட்டெர்டே, டாவோவின் மேயராக 22 ஆண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குற்றங்களில் இருந்து நகரத்தை பாதுகாப்பது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் மூலம் பிரபலமான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இறுதி பிரசாரத்தின் போது ரோட்ரிகோ, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குற்றச் செயல்களை நிறுத்துவது நல்லது என்றும் இல்லையென்றால் அவர்களை நான் கொன்றுவிடுவேன் என்றும் தெரிவித்தார். இவரது ஆட்சி கடந்த 2022-ஆம் ஆண்டு முடிவடைந்தது.

இந்நிலையில்,  ’போதைப்பொருளுக்கு எதிரான போர்’ என்ற பெயரில் ரோட்ரிகோ டுட்டெர்டே அரசு, ஆறாயிரம் ஏழை, எளிய மக்களை கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவ தொடர்பாக இவர் மீது 2022-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது ரோட்ரிகோ டுட்டெர்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோட்ரிகோ டுட்டெர்டே உத்தரவின் பேரில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த போலீசார், ஏழை, எளிய மக்களை மட்டுமே சுட்டுத் தள்ளினர் என்றும் அவர்களால் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய முடியவில்லை என்றும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

Read more:-

பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow