ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

Mar 11, 2025 - 08:02
Mar 11, 2025 - 08:32
 0
ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாசா சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பட்டனர். இவர்கள் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

எட்டு நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒன்பது மாதங்களாக அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அறிவித்த தேதிக்கு முன்னரே விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்பட்டது. அதாவது, விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ம் தேதி  பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாசா விண்வெளி வீர்ர நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகிய இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அப்போது, இந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்து வர ஏதுவாக இரண்டு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது.

இந்த விண்கலம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடம் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அதிக நேர நடைப்பயணம்

விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். 9-வது முறையாக விண்வெளியில் நடந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார். புட்ச் வில்மோருக்கு இது ஐந்தாவது நடைபயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow