K U M U D A M   N E W S

தமிழ்நாடு

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை.. என்ன செய்கிறது போலீஸ்?.. சீமான் ஆவேசம்!

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

'அந்தியோதயா' ரயில் 9 நாட்கள் ரத்து.. 'வைகை' புறப்படும் இடம் மாற்றம்.. முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்' அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!

'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது' என்று மின்வாரியம் கூறியுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!

''குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்''

உயர்ந்தது மின் கட்டணம்... எவ்வளவு கட்டணம்? எப்போது முதல் அமல்படுத்தப்படும்?

2026 - 27 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...

புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...

சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘அமலாக்க துறையினர் என்னை துன்புறுத்தினார்கள்’ - நீதிபதியிடம் புலம்பிய ஜாபர் சாதிக்

Jaffar Sadiq Drug Smuggling Case : 4 முக்கிய நபர்களின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

ஆசை நாயகியை சொந்தம் கொண்டாடுவது யார்? - நண்பருக்கு மதுவில் விஷம் வைத்து கொலை

ஜெரால்டுக்கு மனசுக்குள் சஞ்சலத்தை ஏற்படுத்த, தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு அடிக்கடி அழைத்து காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Engineering Council: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... அமைச்சர் பொன்முடி கொடுத்த அப்டேட்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய படையெடுப்பில் இந்து மடங்கள் அழிக்கப்பட்டது - சனாதனம் குறித்து ஆர்.என்.ரவி பேச்சு

பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம். சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை முதல் ஆளாக வெட்டிய திருவேங்கடம்... 3 நாட்களில் 2 என்கவுன்ட்டரால் பரபரப்பு...

மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... புதிய சிசிடிவி காட்சி வெளியீடு... எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்டர்.. போலீஸ் அதிரடி... நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. பைக்குடன் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலைகளும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வெளியே தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படும் ஜாபர் சாதிக்... சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை?

போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் விவகாரத்தில், அமலக்காத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இரண்டு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.

Chennai Rain: பகலில் வாட்டி வதைத்த வெயில்... இரவில் வெளுத்து வாங்கிய மழை... சில்லுன்னு மாறிய சென்னை!

Chennai Rain Update : சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.