தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ

தமிழ்நாடு, கர்நாடகா வழியாக கனடாவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ
முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ

இலங்கையில் இருந்து படகுகளில் வந்த இரண்டு குழுவினரை நடுக்கடலில் வேறு சில படகுகள் மூலம் தமிழ்நாட்டுக்குள் மோசடி கும்பலை அழைத்து வந்துள்ளது. பின்னர் அவர்களை தமிழ்நாட்டில் உள்ள மண்டபம், தூத்துக்குடி வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு வாகனங்களிலும், ரயிலிலும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் முதன் முதலாக கர்நாடகா போலீசார் தான் வழக்குப்பதிவு செய்தனர்.

அதாவது, இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் சட்டவிரோதமாக மங்களூரில் உள்ள ஒரு சில விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கர்நாடகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மாநில போலீசார் நடத்திய சோதனையின் போது அங்கு உரிய ஆவணங்கள் இன்றி இலங்கை நாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

மேலும் படிக்க: காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

இந்த மோசடி சர்வதேச அளவில் விரிவடைந்ததை அடுத்து என்ஐஏ இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் கனடாவில் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரான முகமது இப்ராஹிம் என்பவரை தமிழக காவல்துறையின் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் உதவியோடு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இவர் சென்னையில் பதுங்கி இருந்ததையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த மோசடி வழக்கு குறித்து என்ஐஏ கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மொத்தம் பத்துப் பேருக்குத் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  முகமது இப்ராஹிமையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்த வழக்கில் ஏற்கனவே என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய இம்ரான் ஹாஜியார் என்பவர் தலைமறைவாக உள்ளார் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.