நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறை சம்மன் அளிக்கப்பட்டது. அப்போது சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது . கண்டிப்பாக இரண்டாவது சம்மனுக்கு ஆஜராக வேண்டும் இல்லை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் நேற்று (பிப்.28) இரவு சுமார் 10 மணியளவில் சீமான் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போதெல்லாம் தொண்டர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் காரணமாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு மூன்று அடுக்கில் தடுப்புகள் போடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதையும் மீறி சீமான் விசாரணைக்கு வந்த போது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தடுப்புகளை தாண்டி சீமான் மற்றும் வழக்கறிஞர்கள், விசாரணைக்கு காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவரிடம் 63 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் குறிப்பாக நடிகையின் தொடர்பு உள்ளிட்டவற்றை குறித்தும், 60 லட்சம் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு மணி நேரம் 15 நிமிடம் விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். விசாரணையில் அதே பழைய கேள்விகளே கேட்டார்கள். முந்தைய முறை இதேபோன்ற விசாரணையில் ஆய்வாளர் முன்பு மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலை பதிவு செய்தேன். புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை அதற்குரிய விளக்கத்தை நான் அளித்துள்ளேன்.
வீட்டு முகவரி, நடிகையை எப்போது சந்தித்தேன் உள்ளிட்ட கேள்விகளைத்தான் கேட்டார்கள். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். அடுத்தடுத்த நாளைக்கு சம்மன் என்பது அனுப்பப்படுவது அடக்குமுறை மற்றும் அராஜகம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவை விசாரிக்கப்பட்டது .15 ஆண்டுகளாக இருக்கும் இந்த வழக்கை நான் தான் முடிவுக்கு கொண்டு வர வழக்கு தொடர்ந்தேன். நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மூன்று மாத கால அவகாசமும் கொடுத்துள்ளனர். மூன்று மாத கால அவகாசம் இருக்கும் பொழுது மூன்றே நாளில் முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறையினர் முதல் முறை அழைப்பாணையை கொடுக்கும் பொழுது கட்சி பணி திட்டமிட்டு இருந்ததை தெரிவித்து இருந்தேன். உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்குக்கு எதிராக சென்றதை அடுத்து அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரிக்கிறார்கள். வீட்டில் சென்று அழைப்பாணையை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. சம்மன் கொடுக்கும் போது வீட்டில் ஆள் இருந்தார்கள், இல்லை என்னை அழைத்திருக்கலாம்.
ஒட்டும்போது தடுத்தால் மட்டுமே தவறு என தெரிவித்திருக்கலாம் அதன் பின்பு அதை வைத்து பூஜை செய்ய முடியுமா? சம்மனை பார்த்துவிட்டு கிழிக்கிறோம் அழைப்பானையை கிழிக்க கூடாது என்று இருக்கிறதா எனக்கேட்டார். நான் அழைப்பாணையை வாங்கிய உடன் கிழித்துப் போட்டேன் அது குற்றமா? அதே கதையை மீண்டும் கேட்டு புதிய ஆய்வாளர் பதிவு செய்து கொண்டார். வீட்டில் கைது செய்த ராணுவ வீரர் மற்றும் உதவியாளரை காவல்துறை தாக்கியதாக தெரியவந்துள்ளது. அது அவசியமற்றது மற்றும் தேவையற்றது என்று கூறினார்.
தொடர்ந்து, வளசரவாக்கம் காவலர்கள் சம்மனை ஒட்டி உள்ளார்கள், நீலாங்கரை காவலர்களுக்கு இது தேவையே இல்லை. ஆறு மணிக்கு ஆஜராகும் படி காவல்துறை முதலில் தெரிவித்தது. அதன் பின்பு 8 மணிக்கு ஆஜராக வேண்டும் என வழக்கறிஞர்களிடம் கூறியிருந்தார்கள். அதன் பின்பு பத்து நிமிடம் 10 நிமிடம் என காரணம் கூறி காலதாமதப்படுத்தினர். முதல்வர் பேச்சு இருக்கிற காரணத்தினால் தன்னை விசாரணைக்கு தாமதமாக அழைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
உலகம் முழுதும் எனக்கு இருக்கும் தொண்டர்கள் அனுப்பும் குரல் செய்தியால் வலி ஏற்படவில்லை வெறி ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு எனக்கு பின்னடைவில்லை இடையூறும் இல்லை. பல்வேறு இடையூறுகள் அளித்தாலும் மக்கள் என்னை அங்கீகரித்துள்ளார்கள். என் மீதான நற்பெயரை சிதைப்பதற்காக இந்த அரசு இவ்வாறு செய்கிறது என மக்களுக்கு தெரியும். என் அரசியல் வாழ்வுக்கு பின்னடைவாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு இது பின்னடைவாக இருக்கும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் உறுதியாக எதிரொலிக்கும். எனக்கும் புகார் அளித்த நடிகைக்கும் ஒன்றுமில்லை. அவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த அரசுதான் இந்த விவாகரத்தை தூண்டிவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. இந்த வழக்கு 2021-ல் விசாரிக்கப்பட்டது 2024 விசாரிக்கப்பட்டது. மீண்டும் 2026 இல் விசாரிக்கப்படும் முற்று பெறாமல் இருக்கும்.
நடிகையுடன் பழகியது திருமணம் என்ற இடத்திற்கே வரவில்லை. மொத்தமாகவே ஓராண்டிற்குள் ஆறு ஏழு மாதம் மட்டுமே பேசியிருக்கிறோம். 2008- 2009 காலங்களில் சிறையில் தான் இருந்தேன். சிறையில் இருக்கும் பொழுது தொடர்பில்லை. அதன்பிறகு தொடர்ந்து அதிமுக ஆதரிச்சு தேர்தலில் ஈடுபட்டேன். பெரியாரைப் பற்றி பேசியதால்தான் திராவிடக் கழகத்தின் அழுத்தத்தின் காரணமாக, கைது செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் என்பது இருக்கிறது. மிரட்டல் உருட்டலுக்கு அஞ்சுகிற ஆள் நான் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
ஏழு முறை கருக்கலைப்பு செய்தார்கள், 60 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினேன் என்பது போன்ற நடிகையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் அதை பதிவு செய்திருக்கக் கூடாது. அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் செல்கிறேன். 60 லட்ச ரூபாய் கொடுத்தார்கள் என தெரிவிக்கிறீர்கள். ஆனால் ஐம்பதாயிரம் என்னிடம் வாங்கினார்கள். கஷ்டத்தில் இருப்பவர்கள் எப்படி எனக்கு 60 லட்சம் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார். முதல் புகாரிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
2024-ஆம் ஆண்டு வீரலட்சுமி உடன் சேர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை நடிகை முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். காதலித்தவர் பழிவாங்குகிறார்கள் என்று நினைத்துக் கொள்ளலாமா என கேள்வி எழுப்பியபோது காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா. இது காதலா ?கன்றாவியா?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழாவின்போது தன்னைப்போல் பேசியது என்பது கருத்து வேறுபாடாக ஏன் பார்க்க வேண்டும். அவர் சொல்லியது ஆட்சியாளர்களை என்னை சொல்லவில்லை. கொள்கையாக கருத்தாக முரண்பாடு இருக்கிறதே தவிர அன்பாக, பாசமாக எந்தவித மாற்றமில்லை அவர் என்றும் என் அன்புக்குரிய தம்பி. அரசியலில் வேறு தளத்தில் இருக்கிறார். நான் பெரியாரை ஏற்கவில்லை அவர் பெரியாரை ஏற்கிறார்.
மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு மீண்டும் வருவேன். பல்கலைக்கழகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவில்லையே என கேட்டேன். ஏனென்றால் அங்கெல்லாம் சீமான் இல்லை. என்னை சமாளிக்க முடியவில்லை. என்னுடைய உளவியல் இவர்களை உளவியலாக சாகடிப்பது தான். என்னுடைய மனைவி மன உறுதி கொண்டவள். அமைச்சரின் மகளாக இருந்திருக்கிறாள். இந்திய குடிமைப் பணிக்கு தேர்ச்சி பெற பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
என்னை விரும்பியதால் அதை விட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். பின் சட்டம் படித்து வழக்கறிஞராக இருந்து வருகிறார். அவர்களுக்கு இது சாதாரணம். இதை அவர் துணிவாக எதிர்கொள்வார்கள். அரசியல் கட்சித் தலைவர் முகம் சுழிக்கும் வகையில் பேசுவதை கேட்டபோது, ஒரு அரசியல் தலைவரை மற்றவர்கள் இவ்வாறு பேசலாமா? பெண்ணை அழைத்துச் சென்று கதற கதற வன்புணர்வு செய்தது போல் கூறுகிறீர்கள். ஒரு நடிகை பல ஆண்டுகாலம் தெருத் தெருவாக அசிங்கப்படுத்திய போது ரசித்துக் கொண்டுதான் நீங்கள் இருந்தீர்கள். திருமணம் ஆகி அரசியல் தலைவராக இருக்கும் ஒருவரை அசிங்கப்படுத்துவது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
விரும்பி தான் அவர்கள் உறவு வைத்துள்ளார்கள். அதில் என்ன பிரச்சனை. பின்பு நான் பிரிந்து சென்றுவிட்டேன். எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை யாரும் கேள்வி எழுப்ப மாட்டீர்கள். திமுகவில் இருக்கும் ஒரு தலைவன் இதை பேசக்கூடிய தகுதி இருப்பதாக சொல்லுங்கள். பாலியல் குற்ற வழக்கு எனக் கூறுகிறீர்களே நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவு வைத்துக் கொண்டு சென்றவள் அவள். அவள் சேட்டை செய்யக்கூடாது. இந்த வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்ள இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.