K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள்.. சென்னையில் அதிரடியாக 4 பேர் கைது..!

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

பள்ளிகளில் வாக்குச்சாவடி.. சுத்தம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி

வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்... குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. முழுவிவரம் இதோ..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. பிறந்த 45 நாட்களில் கடத்தல்.. சென்னையில் பரபரப்பு

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவர் மீது கத்திக்குத்து.. தமிழக அரசை கண்டித்து மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவால் எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை!

எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

வெளுக்கப்போகும் கனமழை... 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் விவகாரம்: விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை அதிரடி குறைவு... நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து..!

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

ஓபிஜி குழுமம் ரெய்டு... கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி ரிப்போர்ட்!

சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நட்ட நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... அறக்கட்டளை நிறுவனருக்கு காவலர் கொடுத்த பரிசு... ஆடிப்போன தென்காசி!

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ,மெயின் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞரை காவல்துறையினர் தடாலடியாகக் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கத்திகுத்து விவகாரம்... பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்..

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இன்டர்நெட் கேபிள் திருடா! “எங்கள் திருடர் குல திலகமே””... வைரல் போஸ்டரால் மிரண்ட நெட்டிசன்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பி.எஸ்.என்.எல்., பைபர் கேபிளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி வரும் நிலையில், திருடனை வாழ்த்திய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக திகழும் - துணை முதல்வர்

இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 13) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.

மருத்துவருக்கு கத்திக்குத்து.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்

கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முறையான சிகிச்சை இல்லை.. மருத்துவருக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் கொடூரம்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலைக்காக போலி சான்றிதழ்.. பல்கலைக்கழத்தில் சிக்கிய இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்..

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர், தாமாக முன்வந்து சிக்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கஞ்சா... இவங்களையும் விட்டுவைக்காத கும்பல்... அதிர்ச்சி ரிப்போர்ட்

கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.