தமிழ்நாடு

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!
இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

தலைநகர் சென்னையில் மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது இளைஞர்களின் ஆபத்தான பைக் ரேஸ் கலாச்சாரம். சென்ற ஆண்டுகளில் சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். ஆனால், தற்போது நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் இளைஞர்களின் ஆபத்தான பைக் சாகசம் அதிகரித்து வருகிறது. 

ஆனால் சமீப நாட்களாக குறிப்பிட்ட ஒரு கும்பல் சென்னையின் முக்கிய சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் ரீசில் பகிரும் கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. 

அதுவும் குறிப்பாக ராப் பாடகர் அசல் கோளாறு பாடல் வரியில் வரும் முடிஞ்சா எங்களை கூண்டுல நிப்பாட்டு என்னும் பாடல் வரியை சவால் விடும் விதமாக ரீல்ஸ்களில் பகிர்வது வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் instagram-ல் TEAM 05 என்ற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ப்போரை கதிகலங்க வைக்கும் வகையில் பைக் ரேஸ் மட்டும் பைக் சாகசங்களில் ஈடுபடும் வீடியோக்களை தொடர்ச்சியாக ரீல்ஸ்களாக பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதிலும் குறிப்பாக அவ்வாறு பகிரப்படும் ரீல்ஸ்களின் கமெண்ட்களில் பைக் ரேஸ் பந்தயத்திற்காக சென்னையின் முக்கிய இடங்களை தேர்வு செய்து பந்தயங்களில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அவ்வாறு பகிரப்பட்டு உள்ள வீடியோ காட்சிகளில் குழுக்களாக அதிவேக பைக்கில் இளைஞர்கள் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக செல்லுவது. எதிர்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவலர்களை வம்பிழுக்கும் விதமாக ஆக்சிலேட்டர்களை முறுக்கி அதிக சத்தத்தை ஏற்படுத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.  அதேபோல் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான மவுண்ட் ரோடு சாலை சந்திப்பில் அரை நிர்வாண உடையுடன் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் காட்சி பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

சட்டத்தின் படி, பொதுவெளிகளில் மற்றவர்களுக்கு இடையூறாகவோ அல்லது வெறுப்புகளை உருவாக்கும் வகையில் ரீல்ஸ் எடுத்து போடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என காவல்துறையின் எச்சரிக்கையும் மீறி சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

சென்னை மாநகரில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையினர், சாலையில் பயணிக்கும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  சம்பவங்களின் ஈடுபடும் இது பன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.