தமிழ்நாடு

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொடைரோடு அருகே சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கணவன்-மனைவி எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தனர். 

ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (54). இவரது மனைவி பாப்பாத்தி (50) இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் கொடைரோடு சுங்கச்சாவடியை அடித்து தளி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் பாலத்தில் மோதியது.  இச்சம்பவத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டடர். மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கருப்பையா பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவரது மனைவி பாப்பாத்தியும் படுகாயத்துடன் நிகழ்விடத்தில்  உயிரிழந்தார்.  

இதனைத்தொடர்ந்து விபத்து நடந்தது இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.