K U M U D A M   N E W S

விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து சூப்பர் 16 சுற்று… பிரான்ஸ், போர்ச்சுக்கல் காலிறுதிக்கு தகுதி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 போட்டியில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீர்?... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர். எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சேப்பாக்கத்தில் சாதித்த 'சிங்கப்பெண்கள்'... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பெளண்டரிகளாக விளாசித்தள்ளிய ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம் (161 பந்தில் 149 ரன்) விளாசினார். மறுபக்கம் சிக்ஸர் மழை பொழிந்த 20 வயதான ஷஃபாலி வர்மா, 197 பந்தில் 205 ரன்கள் எடுத்தார். இதில் 23 பெளண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு... பெரும் கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி!

ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து 'கிங்' கோலி, 'ஹிட்மேன்' ரோகித் ஓய்வு... பயிற்சியாளர் டிராவிட்டும் விடை பெற்றார்!

125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... 603 ரன்கள் குவித்து இந்திய 'சிங்கப் பெண்கள்' சாதனை!

சென்னை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 603 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

டி 20 உலகக் கோப்பை பைனல்... சாம்பியன் கனவில் இந்தியா – தென்னாப்பிரிக்கா... கோப்பை யாருக்கு?

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழையால் ஆட்டம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

T20 World Cup: இங்கிலாந்தை அசுர வதம் செய்த இந்தியா... பைனலில் தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.