IND VS AUS: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்!
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 51.2 ஓவருக்கு 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய நிலையில், தன்னுடைய அறிமுக போட்டியிலேயே ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் முதல் நாள் ஆட்ட முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இன்றைய போட்டியில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தனர். இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடியாக பந்துவீசி இந்திய அணியை 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினர்.
இந்திய அணியை மிகக்குறைவான ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 44 ஆண்டுகால வரலாற்றில் 40 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் மோசமான சாதனையை பெற்றுள்ளது.
தொடர்ந்து 2-வது நாள் போடியை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 37 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்,. அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 26, அலெக்ஸ் ஹேரி 21 ரன்கள் சேர்த்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 51.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷிட் ராணா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட 46 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்தியா தனது இரண்டாவது இன்னிங்கைத் தொடங்கி விளையாடி வருகிறது.
What's Your Reaction?