மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பாக நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை திண்டுக்கல் சிவகங்கை திருச்சி புதுகோட்டை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை மடக்கிப் பிடிக்க 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படுகின்றன மேலும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்
இந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், ஏர் கூலர், டிரெஸ்ஸிங் டேபில் மெத்தை ரொக்க பணம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை அழைத்து வந்த காளை உரிமையாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை அழைத்து வந்த காளை உரிமையாளரான அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த சுரேஷ் வயது (50) என்பவர் மாரடைப்பால் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.