தமிழ்நாடு

முதல் பூத் கமிட்டி மாநாடு.. தனி விமானம் மூலம் கோவை பயணம்!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

முதல் பூத் கமிட்டி மாநாடு.. தனி விமானம் மூலம் கோவை பயணம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில், தவெகெ தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள் இடையேஎ உரையாற்ற உள்ளார்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கள் கலந்து கொள்ள உள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார். பின்னர் அங்கிருந்த காரில், மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு செல்லும் அவர், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

அதேபோல், நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கிலும் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றி ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்தரங்கில் த.வெ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே அனுமதி என கூறப்பட்டுள்ள நிலையில், முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.