திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று தேரில் எழுந்தருளிய பெருமாளை கண்டு 'கோவிந்தா கோவிந்தா' முழக்கமிட்டு பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டபடி, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்த வருட சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாள் சித்திரை மாதம் 13ஆம் தேதியான இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோயில் திருவிழா தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறும் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று தேர்திருவிழா நடைபெற்று வருகிறது.
முன்னதாக பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு புறப்பட்டார். ஐந்து முப்பது மணிக்கு சித்திரை மண்டபத்தை வந்தடைந்தார். சரியாக 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நம்பெருமாள் தினமும் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு பக்தர்கள் கோஷத்துடன் தேரோட்டம் தொடங்கப்பட்ட நிலையில், கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.