மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் திமுகவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன் உட்பட பலரும் படுகாயம் அடைந்தனர்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இயற்கையாகவே நடைபெறும். ஜல்லிக்கட்டு. ஆனால், திமுகவினர் நடத்தும் ஒவ்வொரு வார ஜல்லிக்கட்டு போட்டியிலும் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மண்வாசனையுடன் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியான வீர விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபனம் இல்லை.
ஆனால், ஒவ்வொரு வாரம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியால் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கூட வருத்தம் அடைகிறார்கள். வீர விளையாட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள். இதன் காரணமாக இன்றைக்கு உயிரிழப்புகளும் படுகாயங்களும் ஏற்படுகிறது. இது போன்ற வீர விளையாட்டுகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவது கூட போராடி பெற வேண்டிய நிலை உள்ளது.
மரபு படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். உலகத்திலேயே இதுவரை எந்த நாட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மைதானம் அமைக்கப்படவில்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் இயற்கையாக நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட வாடிவாசல். முன்னோர்கள் கண்டுபிடித்த வாடிவாசல் வேண்டாம் மூர்த்தி கண்டுபிடித்த வாடிவாசல் தான் வேண்டும் என்றால் இது போன்ற விபரீதங்களை சந்திக்க தான் வேண்டும். இதற்கு ஆண்டவனும், மக்களும் தான் பதில் சொல்வார்கள்” என்று கூறினார்.