திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு , பனிக்கன்தெரு, காமாட்சிஅம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, நேற்று நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அப்பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர. தற்போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அப்பகுதியில் பொதுமக்களை நேரில் சந்திப்பதற்காக வருகை தந்தார். அப்போது, 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர் என்றும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.