அரசியல்

விஜய் மக்கள் சந்திப்பு: 'நயன்தாரா வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் சேரும்'- சீமான் கருத்து!

நயன்தாரா சுற்றுப்பயணம் வந்தால் விஜய்க்கு வந்ததை விட இருமடங்கு கூட்டம் சேரும் என சீமான் தெரிவித்தார்.

விஜய் மக்கள் சந்திப்பு: 'நயன்தாரா வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் சேரும்'- சீமான் கருத்து!
Seeman
"நடிகர்கள் அஜித், ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் சுற்றுப்பயணம் வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட இரு மடங்கு கூட்டம் சேரும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நயன்தாரா வந்தால் இருமடங்கு கூட்டம் சேரும்

கோவை விமான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் திருச்சியில் விஜய்யின் பிரச்சாரத்திக்கு வந்திருந்த தொண்டர்களின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விஜய்யின் பரப்புரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "நடிகர் விஜய் பரப்புரைக்கு கூட்டம் வரத்தான் செய்யும். இதுவரை திரையில் பார்த்தவர்கள் நேரில் மீண்டும் வரும்போது அவர்களைப் பார்க்க மக்கள் வருவார்கள். நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது எம்.ஜி.ஆர், சிவாஜி வருகிறார்கள் என்று நின்ற காலம் உண்டு. கடைசியாக அவர்கள் வரவில்லை என ஏமாந்ததும் உண்டு.

சகோதரர் அஜித் வந்தால் இதைவிட கூட்டம் வரும். ரஜினி, நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும். கூட்டத்தைப் பார்க்காதீர்கள்; முன்வைக்கும் கொள்கையைப் பாருங்கள். மக்களுக்காகப் பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி" என்றார்.

'எங்களுக்குப் பெருமைதான்'

தொடர்ந்து அவரிடம், இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்குப் பெருமைதான்" என்று பதிலளித்தார்.