மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சமீபத்தில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்ட துரை வைகோ, ”கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ’முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
ராஜினாமாமுடிவுவாபஸ்
சமீப நாட்களாகவே மல்லை சத்யா மற்றும் துரை வைகோ தரப்பினர் இடையே கருத்து மோதல்கள் நடைப்பெற்று வந்த நிலையில் மல்லை சத்யாவால் தான் துரை வைகோ பதவியில் இருந்து விலகுகிறார் என்று பலரும் கிசுகிசுத்து வந்தனர். இதையடுத்து நேற்று மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் வைகோ தலைமையில் கூடியது. இதில், மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
மேலும் நிர்வாகிகளின் வற்புறுத்தலை ஏற்று ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், துரை வைக்கோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசிய பின்னர் இருவரும் சமரசம் ஆனதாக வைகோ தெரிவித்தார்.
மல்லைசத்யாஅறிக்கை
இந்நிலையில், துரை வைகோவும் தானும் இணைந்த கரங்களாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன்.
இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது. வைக்கோவிற்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவிற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன். இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இணைந்தகரங்களாகசெயல்படுவோம்
நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.