2025 ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தனது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 6 முறை தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தோனி கூறியது என்ன?
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் தோனி பேசியதாவது, “நன்றாக விளையாடியதால் தான் சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அதே சமயம் நன்றாக விளையாடவில்லை என்றால் உணர்ச்சி வசப்பட தேவையில்லை. நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறோமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். சில பந்துகளை பிடித்திருந்தால் முடிவுகள் மாறி இருக்கும். சிஎஸ்கே அணியில் உள்ள குறைகளை சரி செய்து வருகிறோம். அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம் இல்லையென்றால் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராகுவோம்” என்று தெரிவித்துள்ளார்.