இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டை மலை சீனிவாசன் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர், நீதி கட்சிகளின் தலைவர்களில் ஒருவர், அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்தவர். அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அம்பேத்கர் உடன் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றவர்.
ஓட்டேரி இடுகாட்டு அருகே உள்ள சாலைக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இரட்டை மலை சீனிவாசன் சாலை என்று பெயர் சூட்டி இருப்பதை வரவேற்கிறோம். அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், “ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு ‘சமூகநீதி விடுதி’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த அறிவிப்பை விசிக வரவேற்கிறது, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
அதிமுக மற்றும் தவெக இணைந்தால் கூட்டணி பலமானதாக இருக்கும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியது குறித்த கேள்விக்கு “ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லியிருப்பார். அது அவரின் விருப்பமும் கிடையாது. யூகங்களுக்கெல்லாம் யூகமாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கிறது, இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. உறுதியாக இருக்கிறது. இந்த கூட்டணி கட்டுக்கோப்பாகவே இந்த தேர்தலை சந்தித்து வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது குறித்தான கேள்விக்கு, “100 க்கு 100 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கியமான சில கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்பது தவிர்க்க முடியாத மறுக்க முடியாத ஒன்றுதான்.
விசிகவும் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னதாகவே நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.