டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜுன் 28 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், 328 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போடி நேற்றையத்தினம் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இத்தொடரில் கேப்டனாக செயல்பட்டு வந்த கேசவ் மகாராஜ் காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வியான் முல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தொடக்க வீரர்களான ஜோர்சி 10 ரன்களிலும், செனக்வானே 3 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய வியான் முல்டர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 264 ரன்களுடன் நிறைவு செய்த முல்டர், இரண்டாவது நாளான இன்றும் ஜிம்பாப்வே அணியினர் வீசிய பந்துகளை நாலாப்புறமும் பவுண்டரிக்கு விரட்டினார். வெறும் 297 பந்துகளில் 300 ரன்களை கடந்து புதிய சாதனையினை நிகழ்த்தினார் வியான் முல்டர்.
இதன் மூலம், ஹஷிம் ஆம்லாவுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் பதிவு செய்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் முல்டர் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கிற்கு பிறகு, குறைந்த பந்துகளில் முச்சதம் விளாசிய வீரர் என்கிற சாதனையினை படைத்தார். வீரேந்திர சேவாக், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 278 பந்துகளில் முச்சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முச்சதம் விளாசிய பிறகும், அதிரடியாக ஆடி வந்த முல்டர் எப்படியும் மேற்கிந்திய தீவு அணியின் வீரர் பிரையன் லாராவின் அதிகபட்ச தனிநபர் டெஸ்ட் ஸ்கோரான 400 (நாட் அவுட்) என்பதை இன்று முறியடிப்பார் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கியிருந்த நிலையில், சிம்பிளாக டிக்ளர் செய்துவிட்டார் முல்லர்.
இத்தனைக்கும் அவர் தான் அணியின் கேப்டன், அவர் நினைத்திருந்தால் 400 என்ன? 500 ரன்கள்.. எடுத்துக் கூட டிக்ளர் செய்திருக்கலாம். ஆனால், 626 ரன்கள் என்பதே அதிகப்பட்ச இலக்கு தான் என எண்ணி டிக்ளர் செய்துவிட்டார் என முல்லரின் செயலை கிரிக்கெட் அதிர்ச்சி கலந்த உணர்வுடன் பாராட்டி வருகின்றனர்.
களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 334 பந்துகளில், 367 ரன்களை குவித்து இருந்தார். இதில் 49 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். என்ன இருந்தாலும், 400 அடிச்சிட்டு டிக்ளர் பண்ணிருக்கலாம்? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்புவதையும் பார்க்க முடிகிறது.