மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருவள்ளுவர் கோயிலின் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.
கோயில் சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்கள்
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த இந்த திருவள்ளுவர் கோயில் புனரமைப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஏற்கனவே இருந்த ஏகாம்பரர், காமாட்சியம்மன், கருமாரியம்மன், பைரவர், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் நவகிரக சன்னதிகள் உட்பட அனைத்துப் பணிகளும் ரூ.19.17 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன” என்றார்.
“இந்த ஆட்சியில் இதுவரை 3,623 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வருகிற 11-ஆம் தேதி 41 கோயில்களுக்கும், 14-ஆம் தேதி 21 கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. வருகிற தை மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். மேலும், திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ரூ.7,846 கோடி மதிப்புள்ள 7,923.86 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக-வுக்கு அமைச்சர் பதிலடி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “முத்துராமலிங்க தேவரை ஏற்கனவே நமது ஆட்சி போற்றிப் புகழ்கிறது. எனவே, அவருக்கு எங்கெல்லாம் புகழ் சேர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் நமது ஆட்சி புகழ் சேர்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி '210' தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நிறுத்திவிட்டார். '234' தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறியிருக்க வேண்டும். தொடர்ந்து திமுகவை வசை பாடி வந்த அண்ணாமலையே நேற்று திமுக வலுவாக இருக்கிறது என்று பேசியுள்ளார். அண்ணாமலையின் பேச்சிலிருந்து முதலமைச்சரின் நிர்வாகத் திறனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதானமாகப் பேச வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு, “அதிமுக கோமா நிலையில் உள்ளது” என்று விமர்சித்தார்.