இண்டிகோ விமான நிறுவனம், ஒரு பெண் பயணிக்கு அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற இருக்கையை வழங்கியதற்காக, அவருக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பயணியின் குற்றச்சாட்டு
பிங்கி என்ற பெண், கடந்த ஜனவரி 2 அன்று பாகுவிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மிகவும் அழுக்கு நிறைந்த, சுகாதாரமற்ற இருக்கை ஒதுக்கப்பட்டது. இது குறித்து அவர் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தபோது, வகைகள் அலட்சியமாக நடந்துகொண்டதாக பிங்கி குற்றம் சாட்டினார்.
விசாரணை மற்றும் தீர்ப்பு
இண்டிகோ நிறுவனம் இந்த வழக்கிற்குப் பதிலளிக்கையில், "பயணிக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து அறிந்ததும் அவருக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டது. அவர் அதில் விருப்பத்துடன் பயணம் செய்து டெல்லியை சென்றடைந்தார்" என்று தெரிவித்தது.
ஆனால், வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், இண்டிகோ நிறுவனம் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை. விமானப் போக்குவரத்து விதிகளின்படி, பயணிகளின் புகார்களைப் பதிவு செய்ய வேண்டிய முக்கிய ஆவணமான Situation Data Display (SDD) அறிக்கையை இண்டிகோ நிறுவனம் சமர்ப்பிக்கத் தவறியதாகவும், இது இண்டிகோ நிறுவனத்துக்கு பலவீனமாக அமைந்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தப் பெண் பயணி அனுபவித்த மன உளைச்சல், அசோகாரியத்திற்காக ரூ. 1.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுகளுக்காக கூடுதலாக ரூ. 25,000 வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.