இந்தியா

கழுத்தை அறுத்துக் காதலி கொலை.. காதலன் வெறிச்செயல்

ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்துக் காதலி கொலை.. காதலன் வெறிச்செயல்
Murder of girlfriend by slitting her throat
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த பிரதீப் பால் (28) மற்றும் ஹன்சிகா யாதவ் (22) ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாகவும், நீண்ட காலமாக ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் சிட்குல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, தனது காதலி ஹன்சிகா வேறொருவரோடு தொடர்பில் இருப்பதாக சந்தேகம் பிரதீப் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இருவரும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 7) சிட்குல்லில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஹன்சிகா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த பிரதீப் பால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரதீப் பால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹன்சிகாவின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஹன்சிகாவை மருத்துவமனைக்குக் அழைத்து சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள பிரதீப் பாலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.