இந்தியா

உத்தரகாண்டில் மேகவெடிப்பு: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு, 13 பேர் மாயம்!

உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு, 13 பேர் மாயம்!
Cloudburst in Uttarakhand
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று (செப்.16) மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழை, பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன் 13 பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடும் சேதமும், மீட்புப் பணிகளும்

டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் புகுந்த கல்வி நிறுவன வளாகத்திலிருந்து 200 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காணாமல் போன 13 பேரையும் தேடி வருகின்றனர்.

இந்த ஆண்டு பாதிப்புகள்

மழை தொடர்ந்து வரும் நிலையில், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர், 128 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.