ஐபிஎல் 2025

IPL 2025: DC பதிலடி கொடுக்குமா LSG.. லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL 2025: DC பதிலடி கொடுக்குமா LSG.. லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!
லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம் என்றும் அழைக்கப்படும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

2-வது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடப்பு சீசனில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவிய நிலையில் புள்ளிப்பட்டியலில் 2- வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் தோல்வியை தழுவிய டெல்லி இந்த போட்டியில் வென்றால் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதால், இன்றைய போட்டிக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்க்காது.

தொடர்ந்து சொதப்பும் ரிஷப் ப்ண்ட்

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டதால், அனைத்து தரப்பிலும் இருந்து அவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகம் மேலோங்கியது. அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த சீசனில், ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

4 வது இடத்தில் லக்னோ

லக்னோ அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியையும் தழுவியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தனிப்பட்ட முறையில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும், ஒரு கேப்டனாக தனது அணியை மிகவும் திறம்பட வழிநடத்தி வருகிறார். இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் களம் காண்பதால், லக்னோவிற்கு சாதகமாக போட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் மோதியுள்ளது. இதில், இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்போர்ட்ஸ் இரண்டிலும் நேரலையில் பார்க்கலாம்.