2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றையப்போட்டியில், கொல்கத்தா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
நடப்பு தொடரில், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆர்சிபி அணியுடனான தொடக்கப்போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, ராஜஸ்தான் அணியுடனான 2-வது போட்டியில், கேகேஆர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை அணிக்கு எதிரான 3-வது போட்டியில் 8 விக்கெட் வித்ஹ்டியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசியாக சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தைப்பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
நடப்பு தொடரில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 4 போட்டியில் விளையாடி உள்ள நிலையில், 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, 2 வது போட்டியில், சன்ரைசர்ஸ் அணியுடனான 2-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிபெற்றது. பஞ்சாப் அனியுடனான 3-வது போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
ஒற்றை இலக்கை தாண்டாத ரிஷப் பண்ட்
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகையான 27 கோடிக்கு வாங்கப்பட்ட முதல்வீரர் என்ற பெருமையை பெற்ற ரிஷப் பண்ட் தன்னுடைய பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன ரிஷப் பண்ட், அடுத்து சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில், 15 பந்துகளில் 15 ரன்களும், பஞ்சாப் அணியுடனான போட்டியில் 5 பந்துகளில் 2 ரன்களும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தனது ஃபார்மை இழந்து வருகிறார்.
2 வெற்றி
இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் தங்களது 3-வது வெற்றிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 3 போட்டிகளில், லக்னோ அணியும், கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
ஈடன்கார்டன் மைதானம்
கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதும் இந்த போட்டி ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா தனது சொந்த் மண்ணில் விளையாடும் போட்டி என்பதால் கொல்கத்தா அணிக்கு சாதகமாக இருந்தாலும், பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் மைதானம் என்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்பு நிலவுகிறது. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்போர்ட்ஸ் இரண்டிலும் நேரலையில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2025
IPL 2025: 3-வது வெற்றியை பெறப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ இன்று மோதல்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.