கடந்த மாதம் தான் லண்டனில் தனது சிம்பொனி இசை அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பினார் இளையராஜா. இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ஏராளமான திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், இளையராஜாவும் அடுத்தடுத்து பல ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்து, தனது இசை பயணம் குறித்து சிலாகித்து பேசி வருகிறார். இப்படி தனது சிம்பொனி அரங்கேற்றத்தை கொண்டாடிக் கொண்டிருந்த இளையராஜாவை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியுள்ளது குட் பேட் அக்லி திரைப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை அஜித்தின் தரமான ஃபேன் பாய் சம்பவம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், நெகட்டிவான விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லை. குறிப்பாக அஜித்தின் பழைய படங்களில் இருந்து சம்பந்தமே இல்லாமல் ஏரளமான ரெஃபரன்ஸ்கள் இருந்ததோடு, 90களில் ஹிட்டடித்த பாடல்களையும் அன்லிமிட்டெடாக ஆங்காங்கே வைத்திருந்தார் ஆதிக்.
அதில், இளையராஜா இசையில் சூப்பர் ஹிட்டடித்த, “இளமை இதோ இதோ, ஏஞ்ஜோடி மஞ்சக் குருவி, ஒத்த ரூபாயும் தாரேன்” ஆகிய பாடல்களும் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக குட் பேட் அக்லி ரிலீஸான பின்னர், ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் 2கே கிட்ஸ்களையும் ஆட வைத்தது. ஆனால், இப்போது குட் பேட் அக்லி படக்குழுவை ஆட்டம் காண வைத்துள்ளார் இளையராஜா. அதாவது, தான் இசையமைத்த 3 பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு தருவதோடு, உடனே அந்தப் பாடல்களை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் 7 நாட்களில் எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடருவேன் என, மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நோட்டீஸ் இளையராஜா அனுப்பியுள்ளார்.
கடந்தாண்டு ரஜினியின் கூலி டைட்டில் டீசர் வெளியான போது, அதில் தங்கமகன் படத்தில் இருந்து இளையராஜா இசையமைத்த வா வா பக்கம் வா பாடலின் டிஸ்கோ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்போதும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரி தான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் வைத்திருப்பது போல, இளையராஜாவும் கேட்பதில் தவறில்லை. அன்றைய சூழலில் இளையராஜா ரைட்ஸ் பதியாமல் விட்டுவிட்டார்.
பழைய படங்களை ரீமேக் செய்யும் போதோ, அல்லது பழைய படங்களின் டைட்டிலை பயன்படுத்தவோ, அந்தப் படங்களின் தயாரிப்பாளர், இயக்குநரிடம் காப்பி ரைட்ஸ் வாங்கி தான் படத்தை எடுக்கின்றனர். அதேபோல தான் இளையராஜாவும் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு காப்பி ரைட்ஸ் கேட்பதாக அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், குட் பேட் அக்லி படத்துக்கு ஹைப் கொடுத்தது மட்டுமல்லாமல், இப்போது சூப்பர் ஹிட் அடித்தற்கும் காரணமே, இளையராஜாவின் ஒத்த ரூபாயும் தாரேன் பாட்டு தான். அதுக்கும் இளையராஜா செக் வைத்துள்ளது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.