வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித் இதுபோன்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளதாகவும், அஜித் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்த இந்த திரைப்படம், கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று காலையில் வெளிவந்த தகவலில் கடந்த 5 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 170 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை என்பதால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குட்பேட் அக்லி திரைப்பாம் வெளியான போது, வேறு முக்கிய திரைப்படம் வெளியாகாததால், மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு அஜித் நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படம் 3 நாட்களில் 100 கோடி வசூலித்தது. 'நேர் கொண்ட பார்வை' 6 நாட்களில் 100 கோடி வசூலித்த நிலையில், தற்போது 'குட் பேட் அக்லி' மிக விரைவாக ரூ.100 கோடி வசூலைப் பெற்ற அஜித் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
BLOCKBUSTER SAMBAVAM AT THE BOX OFFICE 💥💥#GoodBadUgly smashes 100 CRORES GROSS mark in Tamil Nadu ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 15, 2025
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6uRU5#BlockbusterGBU#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @gvprakash @AbinandhanR… pic.twitter.com/GEdgxMXHoN
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மாறுபட்ட, கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படம் வியாபார ரீதியாக வசூலைப் பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.