அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு இடமேயில்லை.. உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி

Edappadi Palaniswamy on ADMK Dismissed : அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு, செயற்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது

Sep 23, 2024 - 11:09
Sep 23, 2024 - 15:57
 0
அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு இடமேயில்லை.. உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி
edappadi palaniswami vs o paneerselvam

Edappadi Palaniswamy on ADMK Dismissed : பிரிந்துள்ள அதிமுக டிசம்பருக்குள் ஒன்றாக இணையும் என்று கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார். கட்சி ஒன்றாக இணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும் என்பது சசிகலாவின் கருத்தாக உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் வலிமையாக இருக்கும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு மரணமடைவதற்கு முன்பு சட்டசபையில் பேசினார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. அவரது மரணத்திற்கு பிறகு சில்லு சில்லாக சிதறியுள்ளது அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக பெரும் தோல்விகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. 

அதிமுகவில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒற்றைத்தலைமை என்ற முழக்கம் எழுந்த போது ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவளர்களும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதனையடுத்து அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கடந்த 2022ம் ஆண்டு நீக்கப்பட்டனர்.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

இந்த தீர்மானங்கள் அப்போது அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுக கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைய உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் ஒரு குழுவையும் சிலர் அமைத்தனர். புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர், கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் அந்த குழுவில் உள்ளனர்.

அதிமுக குறித்து பல்வேறு ஊகம் சார்ந்த செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த ஊகங்கள் அனைத்திற்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வு விலக்கு என்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு, செயற்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.எங்கள் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது.. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். அதுபோல் ஒரு சில பத்திரிக்கைகளை தவிர பெரும்பாலான பத்திரிக்கைகளில் அண்ணா திமுக இணையும், அண்ணா திமுக நாளை இணையும்... அண்ணா திமுக டிசம்பரில் இணையும் என்று எழுதுகிறார்கள்.. எங்கய்யா இணையுது.. அண்ணா திமுக தெளிவாக இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். இனியாவது பத்திரிக்கை ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாதீர்கள்.. இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடியோடு இன்றைக்கு அழிந்து விட்டனர். இது தொண்டர்களால் நிர்ணயிக்கப்படுகின்ற கட்சி.. தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்த கட்சி.. தொண்டர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது என்று உறுதியாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow