ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட் பகுதியில் சுங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.
மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.