புதுக்கோட்டை சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு ஏற்கனவே 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவரது மனைவி இலக்கியா (28) இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த 28ம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்
இலக்கியாவிற்கு இன்று காலை ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இலக்கியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலக்கியா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு
அப்போது, இலக்கியா சிகிச்சையில் உள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.