சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.