சினிமா

திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி காலமானார்

ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ ஆகிய திரைப்படங்களை ஸ்டான்லி இயக்கி உள்ளார்.

 திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி காலமானார்
இயக்குநர் ஸ்டாலின்

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த், சினேகா உள்ளிட்டோர் நடித்த 2002ல் வெளியான திரைப்படம் ஏப்ரல் மாதத்தில். இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் தனுஷை வைத்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் மற்றும் மெர்குரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

திரையுலகினர் இரங்கல்

இந்த நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் இயக்குநர் ஸ்டான்லி (58) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.