இந்தியா

சிபிஐ புதிய இயக்குநர் நியமனம்...பிரதமர் அலுவலகத்தில் ராகுல்காந்தி

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

  சிபிஐ புதிய இயக்குநர் நியமனம்...பிரதமர் அலுவலகத்தில் ராகுல்காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி
சிபிஐ இயக்குநர் பதவிக்காலம்

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அடுத்த இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர். தற்போதைய சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ராகுல்காந்தி பங்கேற்பு

1986ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியும் மாநில காவல் துறைத் தலைவராக இருந்த பிரவீன் சூட், மே 2023 இல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் பிரவீன் சூட் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் அடுத்த சிபிஐ இயக்குநர் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி பங்கேற்றதாக கூறப்படுகிறது.