K U M U D A M   N E W S

Chennai

Dwayne Bravo : ஓய்வு பெற்றதும் தேடி வந்த பதவி.. சி.எஸ்.கே.வில் இருந்து கே.கே.ஆர். சென்ற பிராவோ

Dwayne Bravo : மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோ, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அறிவித்ததை அடுத்து, கே.கே.ஆர். அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது இடத்தில் குப்பை.. உயர்த்தப்பட்ட அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Gold Price Update : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

Gold Price Update in Tamil : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை... 1,100 சிறப்புப் பேருந்துகள்... பொதுமக்களுக்கு குட் நியூஸ்!

TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Rapido ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அருண் அதிரடி நடவடிக்கை

Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிரெடிட் கார்ட் லிங்க் மூலம் மோசடி.. முதியவரிடம் லட்சக்கணக்கில் வடமாநில கும்பல் அபேஸ்

Reward Points Redeem Fraud Case : சென்னையில் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட்டை பணமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பணத்தைப் பறித்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Rain: சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை... விமான சேவைகள் பாதிப்பு!

Heavy Rain Lashes Chennai Today : சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

ஒரு நாள் மழை! சென்னையின் நிலை

சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல கோடி மதிப்புள்ள நிலம்.. கைது செய்யப்பட்ட டிஐஜி... விசாரணையில் பகீர் தகவல்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

DIG Ravindranath Arrest : முக்கிய நகரில் பல கோடி சொத்து மோசடி.. சிக்கிய பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி

DIG Ravindranath Arrest in Land Scam : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

Chennai Rain Update : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Lipstick Issue : நானும் லிப் ஸ்டிக் போடப் போறேன்.. மாதவிக்கு ஆதரவாக களமிறங்கி கவுன்சிலர் உமா ஆனந்தன்

Lipstick Issue in Ripon Building at Chennai : அடுத்த முறை நானும் பளிச்சென்று லிப் ஸ்டிக் போட்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Duffedar Madhavi Transfer : லிப் ஸ்டிக் பூசியதால் டிரான்ஸ்ஃபர்!.. சென்னையின் முதல் பெண் டபேதார் மாதவி கதறல்

First Women Duffedar Madhavi Transfer in Chennai : அதிக லிப்ஸ்டிக் பூசி வந்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்தார்கள் என சென்னை மாநகராட்சியின் முதல் டபேதார் மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் செட்டில் தொழிலாளிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. விரைந்த போலீஸ்..

சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 ஊயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னைக்கு சுத்துப்போட்ட மேகங்கள்.. இன்று இரவு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!

தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

10 வயது சிறுமி வன்கொடுமை.. தேவைப்பட்டால் ரகசிய விசாரணை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

National Green Tribunal : அரசு கட்டிடங்களை ரேஸ் கிளப்புக்கு மாற்ற யோசனை

National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது. 

School Fees Hike : முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்ட கட்டணம்.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

Private School Fees Hike in Chennai : சென்னை மடிப்பாக்கத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.