தமிழ்நாடு

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு உள்ளது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி என 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 44 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் 21,960 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளார்கள்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

22025-26ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரைநடைபெறுகிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க் கைக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது . இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் முடிந்தது.

சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அதேப்போல், குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 4568 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் தேர்வு கூட கண்காணிப்பா ளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பயிற்சி வகுப்பும் தேர்வு கூடங்களில் நேற்று முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டது. தேர்வறையில் செல்போன்,கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனு மதியில்லை. மேலும் குடிநீர் பாட்டில்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் களையும் கிழித்து அனுப்பினர்.

முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உள் பட இதர வழிமுறைகளை யும் மாணவ,மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.