தமிழ்நாடு

பெண்ணின் பெயரில் வீடியோ பதிவு...கம்பி எண்ணும் நீச்சல் பயிற்சியாளர்

சென்னை மருத்துவக்கல்லூரி மாணவி பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்ணின் உடை மாற்றும் வீடியோவை பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

 பெண்ணின் பெயரில் வீடியோ பதிவு...கம்பி எண்ணும் நீச்சல் பயிற்சியாளர்
கைதான நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி
திருமணம் செய்ய மறுப்பு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இவர் சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி 2022 ஆண்டு முதல் அரசு மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (முதுகலைப்படிப்பு) படித்து வருகின்றார்.

இந்நிலையில் மருத்துவ மாணவி ஐசிஎப் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தபோது பயிற்சியாளர் பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அப்போது பாலாஜி மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


பயிற்சியாளர் கைது

இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி மாணவி பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதில் மாணவி உடை மாற்றும் ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்குமாறு மாணவிக்கு அறிவுறுத்தியதன் பேரில் இரு தினங்களுக்கு முன்பு மாணவி இது குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாணவி ஆபாச வீடியோக்களை பதிவிட்ட திருவல்லிக்கேணியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி (39) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் இன்ஸ்டாகிராம் பதிவிட்ட மாணவி வீடியோவை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.