2026 தேர்தல்
2026ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, பூத் கமிட்டி கூட்டம், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் என அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணி, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக மா.செ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவில் அமைப்பு ரீதியாக ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் ஒன்றியங்கள் பிரிப்பு பட்டியலை மாவட்ட செயலாளர்கள் மே7ம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சார்பு அணி நிர்வாகிகள் சார்பு அணியில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் அதற்கான பட்டியலை மே 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் சரியாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்
சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.