பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் யானையில் அமர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நான் த்ரிஷா, நயன்தாரா போன்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.