K U M U D A M   N E W S
Promotional Banner

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அகமதாபாத்தில் தொடரும் துயரம்.. விமான விபத்தில் பலி எணிக்கை உயர்வு

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.

இறந்து விட்டதாக நினைத்தேன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் பேட்டி

முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு...கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு

சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

iPhone 17 Air: ஐபோன் 17 சீரிஸ் மாடல் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள்

iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

90 நாட்கள் ரீ-சார்ஜ் திட்டம்: ஏர்டெல்லுக்கு ஷாக் கொடுத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி... சென்னைக்கு வந்த விமானங்கள் ரத்து... பயணிகள் அவதி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.